ச.ந. கண்ணன்

ச.ந.கண்ணன்

*நான்*புத்தகங்கள்


என்னைக் கண்டித்த ஒரு பெண்

 

 

(ஏற்கெனவே எழுதியதுதான். புத்தகக் காட்சிக்காகவும்  புதிய லே அவுட்-க்காகவும்

இன்னொருமுறை!)


நான் கல்கியில் பணிபுரிந்தபோது ப்ளஸ் டூ தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த மாணவர்களைப் பேட்டி எடுத்து அதை ஒரு தொடராக எழுதினேன். 2000த்தில் ஆரம்பித்து அடுத்த எட்டு வருடங்களுக்கு தமிழ்நாட்டின் ஸ்டேட் ஃபர்ஸ்ட் மாணவர்களைப் பேட்டி எடுத்து எழுதுவதாகத் திட்டம். யோசனை சுலபமாக இருந்ததே தவிர தகவல்களைத் திரட்டுவதற்குள் என் முதுகு கழன்று கொண்டது. ஸ்டேட் ஃபர்ஸ்ட் மாணவர்  யார், எந்தப் பள்ளி, முகவரி, தொலைபேசி எண் போன்ற தகவல்களைப் பெறுவது அவ்வளவு சுலபம் இல்லை என்று களத்தில் இறங்கியபிறகுதான் தெரிந்தது.

 

ஒவ்வொரு பள்ளியிலும் சுமாரான சம்பளத்தில் வேலை பார்க்கும் குமாஸ்தாகள்தான் எனக்கு உதவி செய்தார்கள். நிறைய பேர் என் சுமையைப் பகிர்ந்துகொண்டார்கள். எண்களை வாங்கிக்கொண்டு மாணவர்களைத் தொடர்பு கொள்ள ஆரம்பித்தேன். 8 வருடங்களுக்கு முன்பு தமிழக அளவில் சாதனை படைத்த மாணவரை இப்போது தொடர்பு கொண்டு பேட்டி கேட்டால் எப்படி இருக்கும்? பலபேருக்கு சந்தோசத்தில் பேச்சே வரவில்லை. பேட்டியின் இடைவெளியில் அவர்களின் சொந்த வாழ்க்கையைப் பற்றியும் பேசினார்கள். அத்தனை பேரும் செளக்யமாக இருக்கிறார்கள். அந்த ஒருவருடம் கடும் உழைப்பை வெளிப்படுத்தியதன் பலனை எங்கு சென்றாலும் அனுபவிக்கிறார்கள்.

 

இந்தத் தொடருக்குப் பள்ளிகளில் பலத்த வரவேற்பு. என் தங்கையின் பள்ளி ஆசிரியர், ’கல்கி இதழை வாராவாரம் வாங்கிப் பாருங்கள்என்று வகுப்பறையில் அத்தொடரைப் பரிந்துரைத்தபோது என்  தங்கைக்குப் பெருமை பிடிபடவில்லை.  திருச்சியிலுள்ள ஒரு பள்ளியின் முதல்வர் என்னைத் தொலைபேசியில்  தொடர்புகொண்டு, ‘எங்கள் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஒவ்வொரு திங்கள் அன்றும் கல்கியில் வெளிவரும் +2 சாதனையாளரின் பேட்டியை ப்ரேயரில் வாசிக்கிறோம்என்றார்.

 

ஒரு பெண் சாதனையாளர் மட்டும்தான் பேட்டிக்கு மறுத்தார். அவர் +2வில் ஹிந்தியை இரண்டாம் மொழியாக எடுத்துப் படித்தவர். விதிமுறைகளின்படி தமிழக அரசு அந்தப் பெண்ணின் சாதனையை ஏற்றுக்கொள்ளவில்லை. நான் பேட்டி எடுத்த பலரும் ஹிந்தி எடுத்துப் படித்தவர்கள் என்பதால் வழக்கம்போல அப்பெண்ணைத் தொடர்பு கொண்டேன்.  அவரின் பெற்றோர் என்னிடம் முதலில் பேசினார்கள். சந்தோஷம் பொங்க மகளின் தொலைபேசி எண்ணை அளித்தார்கள். நான் அந்த நம்பருக்கு டயல் செய்தேன்.

 

சார், சாதிச்சபோது யாரும் கண்டுக்கலை. ஒரு உதவியும் செய்யலை. இப்போ வந்து பேட்டி கேட்டு என்ன பிரயோஜனம்? என்று என்மீது பாயத் தொடங்கினார் அந்தப் பெண். என்னிடம் பேட்டி கீட்டி எதுவும் கேட்காதே என்று அழைப்பைத் துண்டித்துவிட்டார்.

 

 (இப்போது அந்தப் பேட்டிகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு மேஜிக் ஆணி என்கிற

சிறு புத்தகமாக (பிராடிஜி) வெளிவந்துள்ளது. விலை ரூ 25 மட்டும்.)  

 

Òò¾¸ò¨¾ Å¡í¸ - http://nhm.in/shop/978-81-8368-756-0.html