ச.ந. கண்ணன்

ச.ந.கண்ணன்
அபியும் நானும் -  கடிதம்

 

கண்ணன்,

 

அபியும் நானும் விமரிசனத்தில் நீங்கள் கூறி இருப்பது மிகச் சரியே. படம் தந்தைக்கும் மகளுக்கும் உள்ள உணர்வின் மேன்மையை பிரதிபலிக்கவில்லை, மாறாக ஒரு தந்தையின் மனப்போராட்டங்களை மட்டுமே சொல்லி இருக்கிறது, இரண்டு இடங்களை தவிர. ஒன்று அப்பா இல்லாத திருமணம் வேண்டாம் என்று சொல்லும் போதும், தந்தையின் ஆசையை நிறைவேற்ற வெண்ணிலா நாளில் படகில் அழைத்துச் சென்று நீண்டநாள் ஆசையை நிறைவேற்றும் நேரத்திலும். மகளின் உண்மையான உணர்வுகளை அதிகம் சொல்லாததினால், நமக்கு எதோ ஒன்று குறைவது போன்ற எண்ணம் வராமல் இல்லை.

 

இரண்டாம் பாகத்தில் நிறைய சினிமாத்தனங்கள் புகுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும், பெண் குழந்தைகள் பெரியவளாகும்போது தந்தையை விடவும் தாயிடமே அதிகம் தன் உணர்வுகளைப்  பகிர்ந்துகொள்வார்கள். தந்தை - மகள் பாசம், இருவர் இடையேயான உரையாடல்கள் நம்  சமுதாயத்தில் குறைவே. எனவே, மகளின் நிலைப்பாடு சரியாகச் சொல்லப் படவில்லை.

 

சினிமா என்றால் நகைச்சுவை வேண்டும் என்ற விதிக்காக, பிரகாஷ்ராஜ் பாத்திரத்தில் அது அளவுக்கு அதிகமாக திணிக்கப்பட்டு இருக்கிறது...அதனால்  seriousness-  அந்தக் கதாபாத்திரம் இழக்கிறது.

 

ராதா மோகன் நிறைய யோசித்து, producer பிரகாஷ்ராஜுக்காகக் கொஞ்சம் தன்னை  compromise  செய்து கொண்டாரோ என்ற எண்ணம் வராமல் இல்லை.

 

நீங்கள் நிறைய எழுதி இருப்பீர்கள் போல இருக்கிறது. இனிமேல்தான் வாசிக்கவேண்டும்.

 

வணக்கத்துடன்,

மாதவன்.

http://maddy-occiput.blogspot.com/