ச.ந. கண்ணன்

ச.ந.கண்ணன்


சுண்டி இழுக்கும் ஒரு பாடல்  

 

 இத்தனை உக்கிரமான, அசாத்தியமான அழகியல் அம்சங்கள் கொண்ட ஒரு நடனத்தை சமீபத்தில் நான் பார்க்கவில்லை.  பியான்ஸேவின் I Am... Sasha Fierce ஆல்பத்தில் உள்ள சிங்கிள் லேடிஸ் பாடலையே குறிப்பிடுகிறேன். இதுவரை படமாக்கப்பட்ட பாடல்களிலேயே மிகச்சிறந்த பாடல் இதுதான் இசை உலகம் பியான்ஸேவைத் தறிகெட்டுப் பாராட்டிக்கொண்டிருக்கிறது.  நிச்சயமாக எந்தப் பாராட்டுக்கும் ஈடான பாடல் இது.  1960களில் வெளிவந்த இரண்டு பாடல்களின் காட்சியமைப்பு மற்றும் நடனத்தை ஒட்டி பாடல் எடுக்கப்பட்டாலும் (பியான்ஸேவும் இதை ஒப்புக்கொண்டிருக்கிறார்) அவற்றிலிருந்து பலமடங்கு மெருகேற்றி அட்டகாசமான ஒரு பாடலை அளித்திருக்கிறார் பியான்ஸே. 

 

யூடியூபில் இந்தப் பாடல் புரட்சி செய்துகொண்டிருக்கிறது.  இந்த ஒரு பாடலுக்கு 15,000 லிங்குகள்.  பியான்ஸே பாணியில் இந்தப் பாடலுக்கு ஏராளமான ரசிகர்கள் நடனம் ஆடி அதை யூடியுப்பில் பதிவேற்றியதிலிருந்து இப்பாடல் ஏற்படுத்திய பாதிப்பை முழுமையாக உணர்ந்துகொள்ளமுடிகிறது.  மைக்கேல் ஜாக்ஸனின் த்ரில்லர் ஏற்படுத்திய ஒரு பரபரப்பையும் கிளர்ச்சியையும் இந்தப் பாடல் ஏற்படுத்தியிருக்கிறது. (பியான்ஸேவின் இந்த ஆல்பத்தில் அவருடைய 'ஆல்டர் ஈகோ'வுக்கு Sasha Fierce என்று பெயர். சக்கரைக்கட்டி படத்தில் வருகிற மிஸ் யூ டா பாடலை சின்மயி பாடியிருப்பார். ஆனால் ரஹ்மான் இந்த ஆல்பம் அளித்த பாதிப்பில் சின்மயின் பெயரோடு Indai Haza என்கிற ஆல்டர் ஈகோ பெயரையும் சேர்த்திருப்பார்.)

 

சர்வதேசத் தரத்தோடு ஒப்பிடும்போது இந்திய சினிமாவில் வெளிப்படும் நடனமும் பாடல் படமாக்கமும் எந்த அளவுக்குப் பின் தங்கியுள்ளன என்பதையும் இப்பாடல் வழியே  உணரமுடிகிறது. பியான்ஸேவுக்கு ஒரு  பறக்கும் முத்தம்!

 

 http://www.youtube.com/watch?v=1glGbl8CFNU&feature=related