இந்த வருட கிராமி விருதுகள் ரஹ்மானால் இந்தியாவில் அதிகக் கவனம் பெற்றிருக்கின்றன. ஆனால் இந்த வருட கிராமியில் கலக்கியவர் பியான்ஸேதான். 6 கிராமி விருதுகளை வென்றிருக்கிறார். பியான்ஸேவின் 'சிங்கிள் லேடீஸ்’ பாடல் உலகம் முழுக்கப் பிரபலமாகியுள்ள நிலையில் கிராமி விருதுகளிலேயே உச்சபட்சமாகக் கருதப்படும் மிகச்சிறந்தப் பாடல் கோப்பையை அது வென்றிருக்கிறது. தமிழ் சினிமாவின் நவீன தேவாவான விஜய் ஆண்டனி வெகுவிரைவில் சிங்கிள் லேடீஸை தமிழ்ப்பாடலாக ஒலிக்கச் செய்வார் என்று நம்புவோம்.