கண்ணன் ,
நீங்கள் " The 3 mistakes of my life" படிக்கிறேன் என்று சொல்லும்போதே அனுப்பலாம் என்று இருந்தேன். சரி போகட்டும். நீங்கள் சேதன் பகத்தை ஓவர் ரேட் செய்கிறீர்கள் எனத் தோன்றுகிறது. அவர் எழுத்துகள் வெறும் போதை. ஒரு மசாலா பாலிவுட் படத்திற்கும் அவர் எழுத்திற்கும் எந்தவிதமான வேறுபாடும் இல்லை.
இதில் அவர் பெண்களின் கதாபாத்திரத்தை வடிவைமப்பது எரிச்சல் ஊட்டுகிறது. எப்பொழுதும் அவள் ஒரு semi-modern ஆக இருப்பாள். எப்போது உதட்டோடு உதடினைக்கலாம் என்று ஏங்குவாள் , பிராவில் கை வைத்தால் அமைதிப்படை மணிவண்ணன் செட் அப் போல் "இருக்கட்டும், இருக்கட்டும்" என்பாள் .
மொத்தத்தில் ஒரு சாராயக்கடையை இவ்வளவு புகழத் தேவை இல்லை என தோன்றுகிறது !
ப்ரகாஷ்