ச.ந. கண்ணன்

ச.ந.கண்ணன்
மசக்கலி

 

டெல்லி 6 பாடல்களை கடந்த சில நாள்களாகத்தான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.  மசக்கலி பாடலை தினமும் ஐம்பதுமுறை கேட்டாலும்கூட திரும்பத் திரும்பக் கேட்கத் தோன்றுகிறது. பாலிவுட் ரசிகர்கள் டெல்லி 6 பாடல்களை தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள். அனைத்து விமர்சகர்களும்  பத்துக்கு பத்து மதிப்பெண்களை வழங்கியிருக்கிறார்கள்.

 

ரஹ்மானை வெறும் டிஸ்கோ நடன அசைவுகளுக்கு  உகந்தவாறு பாடல்கள் அமைக்கும் இசையமைப்பாளராக மட்டுமே பார்க்கிறது தமிழ்சினிமா. ஆனால் ஹிந்தி சினிமாதான் ரஹ்மானின் சிறந்த திறமையை, இசையின் பன்முகத்தன்மையை வெளிக்கொணர்கிறது. டெல்லி 6 சிறந்த உதாரணம்.  நல்லவேளை, இங்கேயே கிடடா நாயே என்று இறைவன் ரஹ்மானை நாலு சுவற்றுக்குள் அடைக்கவில்லை.