ச.ந. கண்ணன்

ச.ந.கண்ணன்
சிறிய இடைவேளை

சென்னையில் கடந்த மார்ச் மாதத்தில் நடந்த டெஸ்ட் மேட்சை நேரில் சென்று பார்த்தேன். ஷேவாக் முன்னூறு ரன்கள் அடித்ததை விடவும் சிறந்த ஆட்டம் இனி சேப்பாக்கில் நிகழ வாய்ப்பில்லை என்று கருதியது எத்தனை பெரிய முட்டாள்த்தனம் என்று இப்போது புரிகிறது. மழை சமயத்தில் சேப்பாக்கத்தில் எங்கே ஐந்து நாள்கள் கிரிக்கெட் நடக்கப்போகிறது என்று அசட்டையாக இருந்து டிக்கெட் வாங்காமல் இருந்துவிட்டேன்.

 

கிரிக்கெட் தோன்றி இத்தனை ஆண்டுகள் ஆகியும் இதுபோல ஒரு டெஸ்ட் மேட்ச் நடக்கவில்லை என்கிற பேச்சு இப்போது எழுகிறது. அப்படியொரு வாய்ப்பை கடந்த ஐந்து நாள்களாக சேப்பாக்க ரசிகர்கள் பெற்றிருக்கிறார்கள். நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.

 

அதாவது போகட்டும். டிசம்பர் மாதம் நிறைய கச்சேரிகள் சென்று என் இசையறிவை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்றும் விரும்பினேன். அதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இன்னமும் வாரணம் ஆயிரம், பூ போன்ற படங்களும் பார்க்க வில்லை.  ஆர்குட் இசை பகுதியைப் புதுப்பித்தும் நீண்டநாளாகிவிட்டன. என் வசத்தில் நான் இல்லை.

 

சென்னைப் புத்தகக் கண்காட்சி (ஜனவரி 8 - 18) நெருங்கிவிட்டதால் இனி என் கவனம் முழுதும் அதன்மீதுதான். ஆகவே, இனி அடுத்த பத்து நாள்கள் நான் எதுவும் புதிதாக எழுதப்போவதில்லை. நீங்களும் எதிர்பார்ப்போடு வந்து ஏமாறவேண்டாம். கிறிஸ்துமஸ் முடிந்தபிறகு மீண்டும் வந்து சந்திக்கிறேன்.