புத்தியும் மனமும்
ஐபிஎல் 2 அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் அணிகள் என்று போட்டி தொடங்கிய நாளன்று நான்கு அணிகள்மீது நம்பிக்கை வைத்திருந்தேன். டெல்லி, சென்னை, பெங்களூரு, ராஜஸ்தான். மூன்று அணிகள் என் கணிப்பை உறுதி செய்துவிட்டன. உலகக்கோப்பை அரையிறுதி அணிகள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் பெயர் விடுபடுமா, அப்படியொரு அசாத்திய நம்பிக்கைதான் ராஜஸ்தான் அணிமீது இருந்தது. ஆனால் வார்னே பாவம், துண்டு, துக்கடா வீரர்களை வைத்து எத்தனை வெற்றிதான் அடைவார்! இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்த ஒரே காரணத்தால் வெளியேற வேண்டிய சூழல் நேர்ந்துவிட்டது.
சரி, யார் போட்டியை வெல்வார்?
புத்தி டெல்லி என்கிறது. சென்னை, சென்னை என்று சதா பிராந்திய உணர்வோடு அல்லாடுகிறது மனம். பார்ப்போம்.