தோனி
தோனி என் மதிப்பிலிருந்து கொஞ்சம் கீழிறங்கிவிட்டார். அணித் தேர்வில் தோனியின் கணிப்பு இவ்வளவு மோசமாக இருக்கும் என்று இதுவரை எண்ணவில்லை.
கோனியைத் தேர்வு செய்து, ஓரமை ஓர் ஆட்டத்திலும் நீக்காமல் மைக் ஹஸியையும் அணிக்குள் சேர்க்காமல் களம் இறங்கியபோதே நான் சாமி சத்தியமாக நம்பினேன், சென்னை அணி தடம்புரளும்.
தோனியின் தலைமைப்பண்புகளில் உள்ள ஓட்டை உடைசல்கள் ஐபிஎல்-லில் வெட்டவெளிச்சமாகின்றன. இந்தியாவின் கேப்டனாக இருப்பதைக் காட்டிலும் பலமடங்கு திறமை ஐபிஎல்-லில் அவசியமாகிறது. அடுத்த ஐபிஎல்-லும் தோனி இதேபோல பல்லிளித்தால் அவர்மீதான அவநம்பிக்கைகள் அதிகமாகும்.