ச.ந. கண்ணன்

ச.ந.கண்ணன்
பிளிண்டாபுக்கு அடுத்து?

காயம் காரணமாக பிளிண்டாப் ஐபிஎல் - சென்னை அணியிலிருந்து விலகியிருக்கிறார். அவருக்கு இது சோகம் என்றாலும் சென்னைக்கு இன்னொரு வெளிநாட்டு வீரரைப் பயன்படுத்திக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு. இச்சமயம் தோனிக்கும் பாதுகாப்பு வளை ஒன்று தேவை. நிச்சயம் நியூசிலாந்தின் ஓரமைத் தாண்டி தோனி சிந்திக்கமாட்டார். என் தேர்வு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜார்ஜ் பெய்லி. ஆறடி உயரம் கொண்ட பெய்லி ஆஸ்திரேலியாவின் அடுத்த தலைமுறை ஆட்டக்காரர்களில் முக்கியமானவர். மார்ஷூக்கு இணையாகப் பேசப்படுபவர். அவ்வப்போது பந்து வீசி அணிக்கு ஒத்தாசையாகவும் இருப்பார். பார்க்கலாம், வை ராஜா வை ஆட்டத்தை தோனி எப்படி ஆடிப்பார்க்கிறார் என்று!