ச.ந. கண்ணன்

யூசுப் பதானுக்கு ஒரு மைதானம் போதாது என்று நினைக்கத் தோன்றுகிறது. இவர் ஆடும்போது எல்லைக்கோடுகள் அனைத்தும் அர்த்தமிழந்து விடுகின்றன. நொறுக்கப்படும் ஒவ்வொரு பந்தும் பார்வையாளர் பகுதியில் இருபது வரிசை தள்ளி விழுகிறது. பதானின் ஆட்டத்தைப் பார்த்து ஷேவாக் பொறாமைப்பட்டால் நான் ஆச்சரியப்படமாட்டேன்.

 

உலகின் சிறந்த 20-20 வீரர்கள் பட்டியலில் பதானின் பெயர் உண்டு (இன்னொரு இந்தியர் யார் தெரியுமா?). ஆனால் யூசுப் பதானால் டெஸ்ட் கிரிக்கெட் ஆடமுடியாது என்று உறுதியாக நம்பப்படுகிறது. யூசுப்பும் டெஸ்ட் அணியில் சீட் பிடிக்க அடித்துக்கொள்வது கிடையாது. சச்சின், லஷ்மண்போல யூசுப் பதான் ஆடும் அழகை நாள் முழுக்கப் பார்க்கமுடியாது. ஆனால் யூசுப் பதானிடம் சமரசம் செய்துகொள்ளும் பாங்கு இருக்கிறது. கிரிக்கெட்டை பேஸ்பால் விளையாட்டு பாணியில் ஆடுகிறார். பந்து வீச்சுக்கு உகந்த ஆட்டம் என்றில்லாமல் எல்லா பந்துகளையும் ஒரு வெறியுடனே எதிர்கொள்ளும் மனப்பாங்கு. ( தமிழ் சினிமாவாக இருந்தால் பேட்டுக்குள் மின்சாரம் பாயும்). . உனக்கு என்ன தேவை, ரன்தானே, வேலையைப் பார் என்கிற உடல்மொழி அவருடையது. 20-20க்கு இந்த அணுகுமுறை போதும்.  

 

கொசுறு -

  • நிறைய பேர் யூசுப் பதான் இர்ஃபானின் தம்பி என்று நினைக்கிறார்கள். ஆட்டத்தைப் பார்த்தாலே தெரிந்துவிடுமே!   
  • அந்த இன்னொரு பிரபல 20-20 இந்திய வீரர் - ரோஹித் சர்மா.