சிறுபிள்ளைத்தனம்
ஏப்ரல், மே மாதங்களில் அடிஅடி என வெயில் அடித்துவிட்டு அடுத்த சில மாதங்களில் பேய் காற்றுடன் மழை பெய்து ஊரையே சின்னாபின்னாமாக்கும் அல்லவா அதுபோல இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸின் ஆட்டம். ஹைய்யா, மூன்று வெற்றிகள் என்று நான் நிலைதடுமாறவில்லை. சென்னையின் சிறுபிள்ளைத்தனமான ஃபீல்டிங்கைப் பார்த்து உலகமே கைகொட்டிச் சிரிக்கிறது. தன்னை நோக்கி வரும் பந்து எத்தனை தாழ்வாரமாகவும் உயரமாகவும் வந்தாலும்கூட அதைப் பத்திரமாகக் கைப்பற்றும் டீவில்லர்ஸிடம் கொஞ்சம் பாடம் பயிலுங்கள் சூப்பர் கிங்ஸுகளே. கோடிகளையும் லட்சங்களையும் சம்பளமாகப் பெறுபவர்கள் செய்யும் காரியம் அல்ல இது. வெட்கம். இப்படியொரு அணி இறுதியில் கோப்பையைக் கைப்பற்றினால் அது கிரிக்கெட்டுக்கே கேடு.