ச.ந. கண்ணன்

ச.ந.கண்ணன்
எண்ணப்படும் நாட்கள்

கண்ணன்,

 

உங்களுடைய பேச்சுலர் வாழ்க்கையின் நாள்கள் எண்ணப்பட்டு வருவது பற்றிப் படித்தேன். உங்களுடைய திருமணத்துக்கு என் வாழ்த்துகள். என்னுடையதும் நிச்சயிக்கப்பட்ட திருமணம்தான். ஆனால் இன்றுவரை என் திருமண வாழ்வின் ஒவ்வொரு நாளையும் அனுபவித்து வாழ்ந்து வருகிறேன். அது ஒரு தனி சுகம் பாஸ்!

 

என்னுடைய திருமண அழைப்பிதழில் இதுபோன்ற வாசகங்கள் இருந்தன.

 

Marriage is not a perfect couple getting together but an imperfect couple learning to enjoy each other differences.............

 

- சுவாமிநாதன் பாலா.

 

 

இதுபோல மின்னஞ்சலிலும் ஆர்குட்டிலும் நிறைய வாழ்த்துக் கடிதங்கள். திருமணம் என்றாலே நாலுபேர் நக்கலாகத்தான் பார்க்கிறார்கள். மவனே, இவ்வளவுநாள் எவ்வளவு ஜாலியாக வாழ்ந்தாய். வா வா... வந்து சிறைக்குள் புகுந்துகொள் என்பதுபோன்ற அர்த்தம் தொனிக்கும் பார்வை அது. சுவாமிநாதனின் மடல் ரொம்பவே தெம்பைக் கொடுக்கிறது. பார்ப்போம்.