ச.ந. கண்ணன்

ச.ந.கண்ணன்
நாக்பூர் 1

                                    நாள் - ஒன்று

                                   இந்தியா 311/5

 

வட இந்தியப் பத்திரிகைகள் விஜய் தேர்வான செய்தி கேட்டதிலிருந்தே கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கின்றன. ஜாஃபரையும் ஆகாஷ் சோப்ராவையும் விட்டுவிட்டு விஜய்யை தேர்வு செய்து விட்டார்களாம்! வெங்சர்க்கார் தொடர்ச்சியாக மும்பை வீரர்களுக்கு வாய்ப்பு தந்தபோது அது அவர்களை உறுத்தவில்லை. விஜய்யின் அடித்தளம் மிகவும் வலுவானது. தகுதி அடிப்படையில் அவரை யாரும் விரல் நீட்டிக் கேள்வி கேட்கமுடியாது. இன்றும் முதல் விக்கெட்டுக்கு கிட்டத்தட்ட நூறு ரன்கள்வரை தாக்குப்பிடித்திருக்கிறார். மூன்றுநாள்கள் முன்னால் சாதாரண நிலையில் இருந்த விஜய் இன்று தெண்டுல்கருடன் கைகுலுக்கிறார். டிவியில் பார்த்த பிரபலங்களோடு நேரில் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் எதிர்கொண்ட முதல் பந்தே ப்ரட் லீ வீசியதுதான். ஆனால் விநோதம் பாருங்கள். பல ஆண்டுகளாக டெஸ்ட் மேட்ச் ஆடக் காத்துக்கிடக்கும் பத்ரிநாத்தால் இன்னமும் பெவிலியனைத் தாண்டமுடியவில்லை.

 

சச்சினுக்கு இது 40 வது செஞ்சுரி. அவர் நல்கிய மூன்று வாய்ப்புகளை கோட்டை விட்டுவிட்டார்கள் ஆஸ்திரேலியர்கள். கிரீஜா (இவர் பெயரை எப்படிச் சரியாக உச்சரிப்பது?) மூன்று விக்கெட்டுகள் எடுத்தாலும் அவரது பந்துகளை நன்கு சாத்திவிட்டார்கள். ஷேன் வார்னே இப்படித்தான் அறிமுகமானார். அவருடைய முதல் டெஸ்ட்டில் சாஸ்திரி வெளுத்து வாங்கினார். அதன்பிறகு சாம்பலிலிருந்து ஷேன் வார்னே முளைத்த கதை உங்களுக்குத் தெரியும்!

 

முதல் நாளில் வலுவான நிலையில் இருக்கிறது இந்தியா. அறுநூறு சாத்தியமில்லை. 500 ஐ தொட்டால் மேட்ச் சுவாரசியமாக இருக்கும்.

 

கம்பீர் விஷயத்தில் அவருக்கு நேர்ந்தது அநியாயம் என்பதைவிட ஏன் ஆஸ்திரேலிய வீரர்கள் தண்டிக்கப்படவில்லை என்பதுதான் முக்கியக் கேள்வி. கம்பீரை நீண்டநேரம் திட்டிக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய வீரர்களைக் கண்டும் காணாமல் விட்ட அம்பயர்கள்தான் முதல் ஆளாக தண்டிக்கப்படவேண்டியவர்கள்.

 

இங்கிலாந்துடனான ஒருநாள் போட்டித் தொடரிலும் விஜய் தேர்வாகியிருக்கிறார். சமீபகாலமாக உத்தப்பா நன்றாக ஆடிக்கொண்டிருக்கிறார். அவர் தேர்வாகவில்லை. பத்ரிநாத்தை நீக்கியதும் சரியான செயலல்ல. விஜய்க்காக உலகமே இறங்கி வருவதுபோலத் தோன்றுகிறது.