ச.ந. கண்ணன்

ச.ந.கண்ணன்
நாக்பூர் டெஸ்ட் 2

                                       நாள் - இரண்டு

                                   இந்தியா 441

                              ஆஸ்திரேலியா 189/2

 

இன்று அனாயாசமாக சில சம்பவங்கள் நடந்துமுடிந்துவிட்டன. இரண்டாவது டெஸ்ட் முடிந்தபின்பு ஆஸ்திரேலிய கூடாரத்துக்குள் நுழைந்த பிஷன் சிங் பேடி, பாண்டிங் காதில் சில ரகசியங்களை ஓதினார். வெளியே வந்துசொன்னார் - 'கிரேஜா அபாரமான ஸ்பின்னர். அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.' பேடிக்கு அங்கு என்ன வேலை என்று சன்னமாக எதிர்ப்பும் எழுந்தது. ஆனால்  Krejza பெயரில்  தண்டத்துக்கு ஒரு z இருப்பதுபோன்று அவரும் அணிக்கு  வீணென்று  மிகமோசமாக  எண்ணிவிட்டார்  பாண்டிங். 

 

தன்னுடைய ஸ்பின்னர் 8 விக்கெட்டுகளை எடுத்தபின்னும் அவமானத்தில் குனிந்த கேப்டன் பாண்டிங்காகத்தான் இருப்பார். முதல் டெஸ்டில் அதிக ரன்களை வாரி இறைத்து அதிக விக்கெட்டுகளும் எடுத்த வீரர் என்கிற நூதனமான சாதனையைச் செய்திருக்கிறார் கிரேஜா. தனி ஆளாக அணியின் வெற்றிக்குப் போராடிவருகிறார். பேடியின் ஏற்பாட்டில் இவர் தயாரானாரா என்று இனிதான் தெரியவரும்.

 

கங்கூலி ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழுக்குக் கொடுத்த பேட்டி (1,2) காரசாரமாக இருக்கிறது. எப்போது மும்மூர்த்திகளும் 20-20 உலகக் கோப்பையில் ஆடாமல் தவிர்த்தார்களோ அப்போதே அவர்களுக்கு நாள் குறித்தாகிவிட்டது. இந்திய கிரிக்கெட்டர் என்றால் வாழ்நாள் முழுக்க ஓர் அழுத்தத்தில்தான் இருந்தாகவேண்டும். இன்று விஜய்க்கும் கல்லடி விழுகிறது. கும்பிளேவுக்கும் அர்ச்சனை விழுகிறது. இது புரியாமல் பிரிகிற சமயத்தில் கங்கூலி ஏன் வீணாக பகைத்துக் கொள்கிறார் என்று புரியவில்லை. முதல் டெஸ்ட்டில் ஆடியதுபோல இறுதி டெஸ்ட்டிலும் பிரமாதமாக ஆடிவிட்டார் கங்கூலி. இந்தியாவின் மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவர் என்கிற பெயர் கங்கூலிக்கு எப்போதும் உண்டு. மூக்கு சிந்தாமல் விடைபெறுவது ஷேமம்.

 

மார்ஷ் போன்ற ஒரு சொக்கத்தங்கத்தை விட்டுவிட்டு எப்படி ஆஸ்திரேலியாவால் தில்லாக டெஸ்ட் மேட்ச் ஆடமுடிகிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். கடிச்சுக்கும் அந்தப் பயம் இருந்திருக்கவேண்டும். மார்ஷ் உள்ளே நுழையவேண்டுமென்றால் பெஞ்சை முதலில் காலி பண்ணவேண்டியவர் கடிச்தான். ஆகச்சிறந்த கேப்டனாக இருந்தாலும் பாண்டிங்கின் மிகப்பெரிய தவறுகளில் ஒன்று, கள்ளம் இல்லாமல் வொயிட்டை மூன்று டெஸ்டுகளுக்கும் நம்பியது. பேட்ஸ்மேன் வேண்டும் என்றால் மார்ஷை கூப்பிட்டிருக்கலாம். அல்லது கிரேஜாவையாவது ஒரு பெளலராக லட்சியம் செய்திருக்கலாம். நிச்சயம் பாண்டிங்குக்கு சொர்க்கம் கிடையாது.

 

டெஸ்ட் மேட்ச் இப்போதே தரணிபடம்போல விறுவிறுப்பாக இருக்கிறது. ஆஸ்திரேலியர்களை மட்டும் எந்த நிமிடத்திலும் நம்பக்கூடாது என்பார்கள். அவர்களின் ஜபர்தஸ்து அடுத்த மூன்று நாள்களில் தெரிந்துவிடும்.