ச.ந. கண்ணன்

ச.ந.கண்ணன்
பரந்தாமன் கதைகள் 5

 

ஆண்கள், பெண்கள், விருப்பங்கள்

 

பிரிட்டனில் நடத்தப்பட்ட ஒரு சர்வேயில் 70 சதவிகிதத்துக்கும் மேலான பெண்கள் தாங்கள் ஆண் முதலாளிகளின் கீழ் பணியாற்ற விரும்புவதாக கருத்து தெரிவித்துள்ளனர். 

 

55 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 83% பேர் ஆண்கள்தான் பெண்களைவிட சிறந்த பாஸ் என்று சொல்லியுள்ளனர். 

 

பெண் பாஸிடம் வேலை பார்க்கும் பெண்கள் கடுமையான தலைவலியால் அவதிப்படுவதாகவும் மன அழுத்தத்தால் துன்புறுவதாகவும் கூறுகின்றனர். 

 

(ஆதாரம் - டெலிகிராப்)

 

47 % பெண்கள் ஆண்களே சிறந்த முதலாளி என்று ஒரு சர்வேயில் தெரிவித்துள்ளனர்.

 

சர்வேயில் பங்கேற்ற ஒரு பெண் இதுகுறித்து கருத்து தெரிவித்தபோது, 'ஆண் பாஸிடம்தான் ஒரு பெண்ணால் மனம் விட்டுப் பேசமுடியும். ஆனால் பெண் முதலாளிகள்  இன்னொரு பெண்ணின் கவலையைக் காது கொடுத்துக் கேட்க விரும்புவதில்லை' என்றார்.

 

இன்னொரு பெண், 'பெண்களிடம் வேலைபார்க்கும்போது அங்கு எலியும் பூனையும் வேலை பார்ப்பதுபொன்ற ஒரு தோற்றம் உருவாகிறது' என்றார்.

 

XX குரோமோசோம்களைவிட அவர்கள் XY குரோம்சோமைக் கொண்ட ஆண்களையே  தங்கள் ஆதர்ச முதலாளியாக விரும்புகின்றனர்.

 

(ஆதாரம் -  சிபிஎஸ் நிறுவனம்)

 

ஆயிரம் ஆண்டுகாலமாக ஒரு ஆண் சொல்வதைக் கேட்டு வளர்ந்த ஒரு பெண்ணால் திடீரென்று ஒரு பெண்ணின் பேச்சைக் கேட்கமுடிவதில்லை. இந்த திடீர் மாற்றத்தை ஒரு பெண்ணால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

 

(டொரோண்டோ விஞ்ஞானிகளின் அறிக்கை)

 

28% பெண்கள் ஆண்களையே சிறந்த பாஸாக தேர்வு செய்துள்ளனர். பெண் பாஸ்களுக்கு 9% ஓட்டுதான் கிடைத்தது.

 

இதுகுறித்து ஒருவர் சொன்னபோது, 'ஆண்கள்தான் வேகமாக முடிவெடுப்பவர்கள். பெண்கள் எமோஷனாக முடிவெடுக்கக் கூடியவர்கள். அதேபோல முதலாளி மட்டுமில்லாமல் பெண்களால் சக ஆண் ஊழியர்களோடு சுமுகமாக வேலை செய்யமுடிகிறது. இதே பெண் ஊழியர்களோடு அவர்களுக்கு எப்போதும் பிரச்னை ஏற்படுகிறது' என்றார்.

 

24% பெண்கள் ஆண்களையே தங்களுக்கு ஏற்ற சக ஊழியராக வாக்கு அளித்துள்ளனர். பெண் சக ஊழியர்கள் 11% வாக்குகளையே பெற்றனர்.

 

(www. vault.com)

55% பெண்கள், ஆண் பாஸையே தங்களுக்கு ஏற்றவராக தேர்ந்தெடுத்துள்ளனர். பெண் பாஸ்களுக்கு 24% ஓட்டே கிடைத்தது. இந்திய மாநகரங்களில் நடத்தப்பட்ட சர்வேயில் ஹைதராபாத்தில் மட்டும் ஆண், பெண் இரு பாஸ்களும் சரிசமமாக ஓட்டு வாங்கினார்கள்.

 

(ரீடிஃப்)

 

நான் ஒரு நிறுவனத்தைக் கட்டிக் காக்கும் பெண்.  என்னிடம் ஐந்து பெண்கள் வேலை பார்த்தார்கள். இவர்களில் ஒரு பெண் எனக்குக் கீழே வேலை பார்க்க மிகவும் சிரமப்பட்டார். என்னைப் பிடிக்காமல் போனதால் என்னைப் பற்றி அவதூறு பரப்ப ஆரம்பித்தார். மேலும் மற்ற பெண்களுக்கும் என்னைப் பிடிக்காமல் போய்விட்டது. இனி நான் ஆண்களைத்தான் வேலைக்கு வைக்கப் போகிறேன்

 

(ஹிலாரி - டெலிகிராப்)