ச.ந. கண்ணன்

ச.ந.கண்ணன்
ரசித்த கவிதை

 

குற்றவாளிகள்

 

செய்தவர்களின்

குற்றத்தை நிரூபிப்பது

பெரிய வேலையொன்றுமல்ல.

அவர்கள் போகும் தூரத்திற்கு

எல்லையுண்டு.

 

மறைத்து வைத்தவைக்கு

அருகிலிருந்து அவர்கள் விலகுவதில்லை.

சிறு வேறுபாடுகள் இருந்தாலும்

அவர்கள் உப்புக் கொள்வார்கள் என்பது

உறுதி.

ஒன்றுமில்லாவிட்டாலும்

அவர்களுக்கு எல்லாம் தெரியும் அல்லவா?

 

செய்யாதவர்களினால்தான்

சிக்கலே.

அவர்கள் ஒப்புக் கொள்வதேயில்லை.

அவர்கள் பதுங்கி நிற்குமிடத்தில் தோண்டிப் பார்த்தால்

ஒன்றும் கிடைப்பதில்லை.

ஒருவகையிலும் அவர்கள் ஒத்துழைப்பதில்லை.

 

நிரபராதிகளைப் போல

கல்மனசுக்காரர்கள் வேறில்லை.

 

- கல்பற்றா நாராயணன்

 

நெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள் (புதிய மலையாளக் கவிதைகள்) - தமிழில் : ஜெயமோகன். வெளியீடு - யுனைடெட் ரைட்டர்ஸ்.