ராஜ் தாக்ரேவுக்கு ஒரு எஸ்.எம்.எஸ்.
பிரிவினைவாதப் பேச்சுகளுக்குப் பெயர் போன ராஜ் தாக்ரே, மும்பையில் வேறு இன, மொழி மக்கள் வாழ்வதையும் அவர்கள் ஆதிக்கம் செலுத்துவதையும் கடுமையாக எதிர்த்து வருபவர். மராத்தி மண் மராத்தியருக்கே என்கிற சித்தாந்தம் கொண்டவர். ஆனால் கடந்த மூன்று நாள்களாக களேபரக்காரர்களின் கையில் மும்பை சிக்கித் தவித்தபோது ராஜ் தாக்ரேவோ அல்லது அவரது மஹாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா இயக்கத்தினரையோ எங்கும் காணமுடியவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை. ராஜ் தாக்ரே கண்டன அறிக்கைகூட விடாதது மக்களிடையே கடும் கோபத்தைக் கிளப்பியிருக்கிறது. குறுஞ்செய்திகளில் அவரைத் துவைத்து காயப்போடுகிறார்கள்.
உதாரணத்துக்கு ஒரு எஸ்.எம்.எஸ் -
'எங்கே ராஜ் தாக்ரேவும் அவர்களது வீரதீர சேனா படைவீரர்களும்? ராஜ் தாக்கரேவுக்குச் சொல்லுங்கள், மும்பை தாக்குதலின்போது மராத்தியர்களையும் மற்றவர்களையும் காப்பாற்றியது டெல்லியைச் சேர்ந்த 200 கமாண்டோ வீரர்களும் மேலும் சில தென்னிந்திய வீரர்களும்தான். இவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்ததால்தான் ராஜ் தாக்ரேவால் சிவாஜி பார்க்கில் நிம்மதியாக உறங்கமுடிகிறது. இந்த எஸ்.எம்.எஸ்-ஐ எல்லோருக்கும் ஃபார்வேர்ட் செய்யுங்கள். இறுதியில் அது அந்த கோழைக்கும் போய்ச் சேரட்டும்.'
இது தொடர்பான செய்திகள் -