ச.ந. கண்ணன்

ச.ந.கண்ணன்
சில்ரை

தமிழக அரசு என்ன சொல்கிறது -  - பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இன்றைக்கும் குறைந்தக் கட்டணம் இரண்டு ரூபாய்தான்.

 

நிஜத்தில் என்ன நடக்கிறது? பேருந்து நிறுத்தத்தில் நின்றால் வெள்ளைப் பலகை பேருந்துகளைக் காண்பதே அரிதாக இருக்கிறது. அது வருவதற்குள் இரண்டு ஏசி பேருந்துகளும் பத்து சொகுசு பேருந்துகளும் மேலும் பத்து எக்ஸ்பிரஸ் பேருந்துகளும் வந்துவிடுகின்றன. சொகுசு இருக்கும்போது மஞ்சள் பலகை கொண்ட பேருந்து அவசியமல்ல என்று மாடி பஸ் போல அதையும் ஒழித்துவிட்டார்கள். குறைந்த கட்டணமாக ஐந்து ரூபாய் கொண்ட பேருந்துகள்தான் சாரி சாரியாக மக்கள் சேவை புரிந்துவருகின்றன. 

 

தமிழ்நாட்டில் படித்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறோம்? ஆனால் யாருக்கு இதைக் கேட்க துணிவிருக்கிறது? பகல் கொள்ளை. பேருந்தின் அறிவிப்புப் பலகையை மட்டும் மாற்றி எம் சர்வீஸ் என்று சொகுசுக்கு இணையாக புதுவகையான பேருந்துகளும் நிறைய சாலையில்  சென்றுகொண்டிருக்கின்றன. ஆனால் இதைப் பற்றிக் கேட்டால் கருணாநிதி என்ன சொல்வார்? கழக ஆட்சியில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று பத்து பாராவுக்கு ஓர் அறிக்கை விடுவார்.   

 

நாணயத்தை நாமாவது கட்டிக்காப்போம்.