ச.ந. கண்ணன்

ச.ந.கண்ணன்
நவஅரசியல் உத்தி

இருவாரங்களுக்கு முன்பு நடந்த பஸ் எரிப்புப் போராட்டங்கள் குறித்து ஆரம்பத்தில் எதுவும் பேசாமல் இருந்த திருமாவளவன் பிறகு தன் வருத்த்தைத் தெரிவித்தாலும் அது ஏதோ கொசு அடிக்கும் பாவனையிலேயே இருந்தது. திருமாவளவனின் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவிக்க எண்ணியவர்கள் உண்ணாவிரதத்தில் தானும் கலந்துகொண்டு சோறு, தண்ணி இல்லாமல் அல்லவா இருந்திருக்கவேண்டும். எதற்கு பெட்ரோல் கேனைத் தூக்கிக் காண்பித்து அப்பாவி மக்களைப் பயமுறுத்தவேண்டும்!

 

திமுக, அதிமுக கட்சிகளின் வன்முறையைப் பார்த்துப் பழகிவிட்டோம். இப்போது சிறுகட்சிகளும் வன்முறைப் பாணியைப் பின்பற்றுவது எக்காலத்திலும் தமிழகம் அமைதிபூமியாக இருக்கப்போவதில்லை என்பதையே உணர்த்துகிறது. 

 

திருமாவளவனுக்கு ஆதரவாக தமிழகத்தில் நிகழ்ந்த பயங்கரங்கள் குறித்த என் தமிழோவியம் இதழ் கட்டுரை-


 

http://www.tamiloviam.com/unicode/02050903.asp