யாரை நம்புவது?
இன்னும் ஒரு 20-20 போட்டி. மும்பை நகர வாழ்க்கைபோல மைதானத்தில் அம்பயர் முதல் எல்லோரும் அவசர அவசரமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். நின்று நிதானமாக மூச்சுவிடக்கூட யாருக்கும் நேரம் கிடைப்பதில்லை. கால்பந்து ஆட்டம் பார்ப்பதுபோல மாறிவிட்டது கிரிக்கெட்.
இந்த 20-20 உலகக்கோப்பையை இந்தியா வெல்லுமா? வெல்லலாம்.
ஆஸ்திரேலியா? வெல்லலாம்.
ஸ்ரீலங்கா - வெல்லலாம்.
தென் ஆப்பிரிக்கா - எப்படியும் செமி பைனலில் தோற்றுப்போய்விடுவார்கள்.
நியூசிலாந்து - வெல்லலாம்!
இங்கிலாந்து - இல்லை
மேற்கு இந்திய அணி - இல்லை
பாகிஸ்தான் - இல்லை
இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை. இந்த நான்கு அணிகள்மீது நான் பணம் கட்டுகிறேன். ஆனால் ஒன்று மட்டும் உறுத்துகிறது. இதுவரை நடந்த 20-20 போட்டிகள் எல்லாவற்றிலும் ஊர் பேர் தெரியாத அணிகள்தான் கோப்பையை வென்றிருக்கின்றன.
இந்தியாவில் நடந்த ஒரேயொரு தேசிய 20-20 போட்டியை வென்றது மும்பையோ, பெங்காலோ கிடையாது. தமிழ்நாடு.
முதல் 20-20 உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற அணிகள் வெல்லக்கூடும் என்று எல்லோரும் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கும்போது பெரிய அதிர்ச்சி கொடுத்தது இந்திய அணி
முதல் ஐபிஎல் போட்டியில் ஓமக்குச்சி நரசிம்மன் போல பரிதாபமாகக் காட்சியளித்த ஒரே அணி - ராஜஸ்தான். ஆனால் கோப்பையை வென்றது இந்த அணிதான்.
2வது ஐபிஎல்-லிலும் டெக்கான் தலையில் மண் விழப்போகிறது என்று எல்லோரும் எதிர்பார்த்தபோது அபாரமாக ஆடி முதலிடம் பெற்றது.
20-20யில் யாரை நம்புவது?