ச.ந. கண்ணன்

ச.ந.கண்ணன்
அப்பாடா!

20-20 உலகக்கோப்பைக்கு ஷாகீர் கான், இஷாந்த் சர்மா தேவையே இல்லை என்று போட்டி ஆரம்பமாகும் முன்பு எழுதியிருந்தேன்.  சென்ற உலகக்கோப்பையில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த வீரர்கள் - ஆர்.பி. சிங் (அப்போது அவர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு பால்வாடி), ஸ்ரீசாந்த், இர்பான் பதான், ஜொகிந்தர் சர்மா. போதும். 20-20க்கு உலகத் தரம் தேவை கிடையாது. அது வேறு பேட்டை. ஷாகீரும் இஷாந்தும் பேர் உள்ள பந்துவீச்சாளர்கள் என்பதால் தோனி ஆர்.பி. சிங்கை கூடாரத்தில் ஒதுக்கியது மாபெரும் தவறு. பீட்டர்சன் மூன்றாவதாக களம் இறங்கியதுபோல தோனி யுவ்ராஜை முன்பே இறக்கியிருக்கவேண்டும். என்னமோ போங்கள்,  இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். ஒரே ஆறுதல், இனி இரண்டு மணிவரை கண் முழிக்கவேண்டாம்.