ச.ந. கண்ணன்

மழையால் டென்னிஸ் ஆட்டங்கள் பாதிக்கப்படுவதை அடிக்கடிப் பார்த்திருக்கிறோம். இதற்கு ஒரு மாற்று ஏற்பாடைச் செய்திருக்கிறது விம்பிள்டன் நிர்வாகம். 87 வயதான விம்பிள்டன் செண்டர் கோர்ட் அரங்கத்துக்கு இப்போது புதிதாக மேற்கூரை  அமைத்திருக்கிறார்கள். அதாவது மழை அல்லது இருள் வேளைகளில் மட்டும்தான் மேற்கூரை  செயல்படும்.

 

இந்த இடத்தில் விம்பிள்டன் நிர்வாகத்தின் பண்பைக் கவனிக்கவேண்டும். எல்லா ஆட்டங்களையும்  மூடிய கூரையில் விளக்கொளியில் நடத்தினால் பார்க்க பேரின்பமாக இருக்குமே என்று விம்பிள்டன் நிர்வாகத்திடம் கேட்கப்பட்டது. ஆனால் அது  அவசியமில்லை என்று சொல்லிவிட்டார்கள். ஆட்டத்தை நேரில் வந்து பார்ப்பவர்களும் எங்கள் ஊழியர்களும் இரவு நேர ஆட்டங்களால் மிகவும்  இன்னலுக்கு ஆளாவார்கள்.இரவுப் பணியினால் எங்கள் ஊழியர்கள் அடுத்த நாள் வேலைக்கு வருவது சிரமம். ஆகவே முடிந்தவரை பகல் பொழுதிலேயே ஆட்டத்தை  முடித்துக்கொள்வோம் என்றார்கள்.

 

சொன்னதுபோல இந்த வருட விம்பிள்டன் ஆட்டங்கள் மேற்கூரையின் அவசியம் இல்லாமலேயே முடிந்துவிட்டது.