சில கடிதங்கள்
Hi kannan,
As you know, Britishers are so blend with traditions and it is difficult for them to make any changes as such.... So, the reason for not changing to day/night format is more to do with traditions. i don't really understand on how you can equate it with panbu ! if someone take a day off for work to see the matches, i am sure they would also know on how to manage the work schedule for the next day :)- so, it is probably to do with impossible british traditions ! One more is to insist that people can enter the showcourts wearing suits to see a sports match.
with regards
manikandan
மணிகண்டன்,
யு.எஸ் மற்றும் ஆஸ்திரேலியன் ஓபன் போட்டிகள் விளக்கொளியில் நடத்தப்படுபவை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால் விம்பிள்டன் பாரம்பரியத்தன்மையுடன் நடத்தப்படும் ஒரு போட்டி. இயற்கையை வணங்கும் ஒரு புராதனமான நிறுவனம். புல்தரையில்தான் ஆட்டம் நடைபெறுகிறது. ஆகவே அவர்கள் அரங்கத்துக்கு மேற்கூரை அமைத்தபின்பும் தன் மரபை பாழாக்கிக்கொள்ளக்கூடாது என்று இரவுப்போட்டிகளுக்கு மறுப்பு சொல்லி வருகிறார்கள். மழையால் ஆட்டம் தடைபடுகிற சூழலில், சூரிய ஒளியில் அன்றைய ஆட்டத்தை முடிக்க முடியாத நிலையில் விளக்கொளி பயன்படுத்தப்படும். ஐபிஎல் ஆட்டங்கள் இரவு எட்டு மணிக்குத் தொடங்குவதுபோல அவர்கள் இரவு நேர ஆட்டங்களுக்கு தயாராக இல்லை. இந்த வருடம் ஒரேயொரு ஆட்டம் மட்டும் விளக்கொளியில் நடந்தது. ஒரேயொருமுறை மட்டும் மேற்கூரை பயன்படுத்தப்பட்டது. போட்டி ஆரம்பமாகும் முன்பு விம்பிள்டன் நிர்வாகத்தின் தலைமை நிர்வாகி ஐயன் ரிட்சி சொன்னதையே அந்தக் கட்டுரையில் சொல்லியிருந்தேன். இரவு நேர ஆட்டங்களால் ஊழியர்கள் சிரமங்களுக்கு ஆளாவார்கள் என்று அதற்கு தகுந்தபடி திட்டங்கள் வகுத்தது பண்பான விஷயமில்லையா? இந்தியாவில் இருந்துகொண்டு இதையெல்லாம் படிக்கும்போது விம்பிள்டன் நிர்வாகத்தின்மீது பெரிய மதிப்பு ஏற்படுகிறது. இந்தியாவிலுள்ள கிரிக்கெட் ஸ்டேடியங்களுக்கு சென்றால் தெரியும், அங்கு ஆடுமாடுகள் போல பார்வையாளர்கள் நடத்தப்படுவது. இந்த நிலையில் ஊழியர்களின் நலனுக்காக யோசிக்கும் ஒரு நிறுவனத்தைப் பாராட்டுவதில் ஒரு தவறும் கிடையாது.
****
உங்க எம் ஜெ பற்றிய பதிவை ஒரு வரி விடாமல் படித்தேன் அப்படி ஒரு சுவாரஸ்ய நடையோடு அழகாக எழுதி இருந்தீர்கள்..
அவர் ஒரு பேட் பாயாக இருந்தாலும் அவரது இசை கட்டி போட்டு ஆட்டியதை அழகாகச் சொன்னீர்கள்..
சுரேஷ்.
சுரேஷ்,
இறப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு லண்டன் நிகழ்ச்சிக்காக ரிகர்சலில் ஈடுபட்டுக்கொணிடிருந்த மைக்கேல் ஜாக்ஸன் தொடர்பான வீடியோ இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இதுவே மைக்கேல் ஜாக்ஸனின் இறுதி நடனம். இங்கே காண்க.
****
அன்புள்ள கண்ணன், வணக்கம்.
உங்கள் பதிவுகளை சில நாள்களாக வாசித்து வருகிறேன். அருமையான எழுத்தும் நடையும். ஆனால் பின்னூட்ட இட முடியவில்லை. அதனால்தான் இந்த மின்னஞ்சல். வாழ்த்துகள்.
என் வலையில் சில உலக சினிமா திரைப்படங்களை பதிவு செய்துள்ளேன். http://www.butterflysurya.blogspot.com. தங்களின் கருத்துகளுக்காகவும் காத்திருக்கிறேன்.
நன்றி..
சூர்யா
சென்னை
நன்றி சூர்யா. நானும் உங்கள் வலைத்தளத்தின் ரசிகன்தான். உலக சினிமா ரசிகர்கள் அவசியம் காணவேண்டிய தளங்களில் ஒன்று. அழகிய புகைப்படங்களைக் கொண்ட உங்கள் வலைத்தளத்தை வாசிக்கும்போது சத்யம் தியேட்டருக்குள் உலாவுவது போன்ற ஓர் உணர்வு ஏற்படுகிறது.
Shikari Sambhu:
நீங்கள் எழுதுவதை எல்லாம் படிக்க ஜாலியா இருக்கு , ஏன் பின்னூட்டம் போட வசதியில்லை உங்கள் தளத்தில் ?
இந்தக் கேள்வியை நான் அடிக்கடி எதிர்கொள்கிறேன். பின்னூட்ட வசதியுள்ள தளங்களின் நிலை இப்போது என்னவென்று உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். என் எழுத்தில் உங்களுக்கு ஒரு கருத்து இருந்தால் மெயிலில் தெரிவிக்கலாம். இதற்கு மேல் வேறு எந்த பரிவர்த்தனையும் இங்கு இடம்பெறவேண்டாம்.